ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1400 ஆக உயர்வு

#Death #Afghanistan #people #Flood #HeavyRain
Prasu
6 hours ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1400 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணம் மலைகள் நிறைந்த இடமாகும். இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை.

நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!