கிளிநொச்சியில் ‘அப்பாவின் நிலம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!

கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில், கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதிய ‘அப்பாவின் நிலம்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற இந்நூல், இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முதுநிலைத் தமிழ் விரிவுரையாளரும், துறைத் தலைவருமான மா. ரூபவதனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
நூல் வெளியீட்டுரையை கவிஞர் வேல்.லவன் அவர்கள் நிகழ்த்தியதுடன், நூலுக்கான மதிப்பீட்டுரையை துணுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் அவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வு கிளிநொச்சி இலக்கிய மற்றும் கல்வி சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



