7 வருடங்களுக்கு பிறகு சீனா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதோடு இந்தியா விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.
சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஷி ஜின்பின், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



