ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹூதி பிரதமர் உயிரிழப்பு
#PrimeMinister
#Death
#Attack
#Israel
#Yemen
#Houthi
Prasu
13 hours ago

ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



