இந்தோனேசியாவில் அரசாங்கத்தின் எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதால் பரபரப்பு!

இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிரான நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது போலீஸ் வாகனம் மோதி ஒருவர் இறந்ததை கண்டித்து நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தோனேசியாவில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த வியாழக்கிழமை தலைநகர் ஜகார்த்தாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கலகத் தடுப்பு போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை எதிர்த்து நேற்று பண்டுங் நகரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன, போராட்டங்கள் வன்முறையாக மாறின. போராட்டக்காரர்கள் கட்டிடங்களுக்கு தீ வைத்தும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் போராட்டம் நடத்தினர்.
நாட்டில் போலீஸ் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இந்தோனேசியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் இந்தப் போராட்டங்கள் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



