கிளிநொச்சியில் சர்வதேச நீதிக்காக கையெழுத்துப் போராட்டம் இன்று ஆரம்பம்!
#SriLanka
#Kilinochchi
#people
#International
#Justice
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
3 hours ago

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற இனஅழிப்பும், மனிதர்களின் இரகசிய புதைகுழிகளும் தொடர்பாக சர்வதேச நீதியை வேண்டி கையெழுத்து போராட்டம் இன்று (ஆகஸ்ட் 29, 2025) தொடங்கியுள்ளது.
செம்மணி உட்பட பல இடங்களில் நடைபெற்ற இந்த அத்துமீறல்கள் குறித்து சர்வதேச நீதியை நாடும் பொருட்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து ஆரம்பித்துள்ளன.
முக்கியக் கோரிக்கைகளாக,
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற இனஅழிப்புகளுக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை.
செம்மணி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய புதைகுழிகளுக்கான நீதி.
இந்த போராட்டம் மக்கள் பங்கேற்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



