2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

#SriLanka #Central Bank #money
Mayoorikka
2 hours ago
2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள்  ஜனாதிபதியிடம்  கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

 மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நினைவு நாணயத் தாள் கையளிக்கப்பட்டது.

 புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும். 

 தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ” சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை ” என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!