அடுத்த வாரம் சீனா செல்லும் 26 வெளிநாட்டு தலைவர்கள்

#China #Country #President #World #leader
Prasu
3 hours ago
அடுத்த வாரம் சீனா செல்லும் 26 வெளிநாட்டு தலைவர்கள்

சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், அதிநவீன ஆயுதங்களின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் 26 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் நடைபெறும் அணிவகுப்பை மேற்குலக நாடுகளும், சர்வதேச நோக்கர்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே, சீனாவில் 26 நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!