துருக்கியில் விதிமீறல் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு அபராதம்
#Minister
#Turkey
#vehicle
#Fined
Prasu
4 hours ago

துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தைக் கேட்டபடி சென்றார். மேலும், காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில், நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.
அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ள நிலையில் அவர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து அப்துல் காதீருக்கு ரூ.20 ஆயிரம் (9 ஆயிரம் லிராக்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



