அமெரிக்காவில் மேடை நகைச்சுவை கலைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

#America #GunShoot #comedy #celebrity
Prasu
3 hours ago
அமெரிக்காவில் மேடை நகைச்சுவை கலைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவை சேர்ந்த மேடை நகைச்சுவை கலைஞர் (stand-up comedian) ரிஜனல்ட் கரோல் (வயது 52). இவரது நகைச்சுவை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகும்.

இந்நிலையில், மிசிசிபி மாகாணம் புருடோன் லேன் பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை இடைமறித்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரிஜன்லட் கரோலை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த ரிஜன்லட் கரோலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் கரோல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, கரோலை சுட்டுகொன்றதாக டிரினெல் வில்லியம் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!