இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
#India
#Ukraine
#Zelensky
#NarendraModi
Prasu
3 hours ago

உக்ரைனின் சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். தற்போது முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்கு கொண்டுவரும் பணியில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்.
பேச்சுவார்த்தையை வலுப்படும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றூம் அதற்உ அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



