வரதட்சணைத் துன்புறுத்தலால் 3 வயது மகளுடன் பெண் தற்கொலை
#India
#Death
#fire
#Harassment
#lecturer
#Dowry
Prasu
2 hours ago

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தனது மூன்று வயது மகளுடன் ஒரு பள்ளி விரிவுரையாளர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகள் யஷஸ்வி, சம்பவ இடத்திலேயே இறந்தபோது, அவரது தாயார் சஞ்சு பிஷ்னோய் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
தனது கணவன் மற்றும் மாமியாரால் வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாக கூறிய தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டுள்ளனர். சஞ்சு பிஷ்னோய் தனது பள்ளியிலிருந்து திரும்பி வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அந்தப் பெண்ணும் அவரது மகளும் உயிரிழக்கும் போது கணவரோ அல்லது அவரது மாமியாரோ வீட்டில் இல்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



