ரணில் சிறை செல்வார் என முன்னரே கணித்த ஜோதிடர்!

#SriLanka #Switzerland #Ranil wickremesinghe #Lanka4
Mayoorikka
6 hours ago
ரணில் சிறை செல்வார் என முன்னரே கணித்த ஜோதிடர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சி முடிந்த பின் சிறைக்குச் செல்வார் என 2022 ம் ஆண்டிலேயே நான் கணித்து விட்டேன்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக 2022 டளஸ் அழகப்பெருமாள் அவர்களோடு இடைக்கால ஜனாதிபதியாகப் போட்டி போடும் பொழுது எனது அரசியல் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் யார் ஜனாதிபதியாக வருவார்கள் என்று? 

அப்பொழுது நான் சொன்னேன் ரணில் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு என்று. எப்படி என்று கேட்டார்? நான் கூறினேன். ரணில் அவர்களுக்குத் தற்பொழுது நீசபங்க ராஜயோகம் உள்ளது. ஆகவே ஏற்கனவே இவர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும் தேசியப் பட்டியல் மூலம் வந்தவர்.

 இப்பொழுதும் அவருடைய நீசபங்க ராஜயோகத்தின் வழியாக ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனாலும் எனக்கு அவரின் பிறந்த நேரம் தெரியாது இருந்தாலும் அவருடைய கிரக அமைப்புக்களின் அமைப்பில் எதிர்பாராத விதமாக அவருக்கு ஒரு பதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஒரு வேளை அவர் பதவிக்கு வருவாராக இருந்தால் அந்தப் பதவி காலம் முடிந்த பின் அவர் சிறைக்குச் செல்வார் என்பதையும் கூறியிருந்தேன். 

 ஆனாலும் அவர் பெரிய அளவில் அதைக் கண்டு கொள்ளவில்லை. டளஸ் அழகப்பெருமாள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார் . பின்பு ரணில் அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு இது சரியாகிவிட்டது ஆனாலும் சிறை செல்வது என்பது இலங்கையில் இதுவரையில் இப்படி எல்லாம் நடக்கவில்லை என்றார். சரி இப்பொழுது எப்படிக் அதை கணித்தேன் என்கின்ற விவரத்தை உங்களுக்கு விளக்கமாகச் சொல்லுகின்றேன். 

 அவருடைய பிறந்த திகதியின் அடிப்படையில் அவருடைய ஜாதகத்தை இங்கே பதிவிட்டுள்ளேன். சாதாரணமாக சோதிடம் தெரிந்த அனைவருக்கும் இது புரியும் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றால் மட்டுமல்ல தங்கள் இருப்பிடங்களை மாறிப் பரிவர்த்தனை யோகம் நீசபங்க ராஜயோகம் விபரீத ராஜ் யோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன அவற்றில் ரணிலைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான நீசபங்க ராஜ யோகங்கள் உள்ளன அதுவும் நீசம் அடைந்த புதன் சூரியனோடும் சுக்கிரனோடும் சேர்ந்து குருவின் வீட்டில் நீசபங்கம் அடைகிறார் அவருக்கு வீடு கொடுத்த குருவும் நீசமாகி உள்ளார். இந்தக் கணிப்பை சந்தேகப்படுகின்றவர்கள் இணையத்தளங்களில் நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன என்பதை தேடி அறிந்து கொள்ளுங்கள். 

 இதே போல் பிரபாகரன் அவர்களின் ஜாதகத்தையும் கணித்து அவர் 2007 க்கு மேல் வெல்ல மாட்டார் என்பதை குறிப்பிட்டு இருந்தேன் ஆனாலும் அதை எழுதுவதற்கு எந்த நட்புகளும் அனுமதிக்கவில்லை அப்பொழுது நான் அதை எழுதி இருந்தாலும் எனது குடும்பம் வன்னியில் இருந்தது அவர்களுக்கு மரண தண்டனை தான் கிடைத்திருக்கும். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எப்படி கணித்தேன் என்பதையும் நான் எழுதுவதற்கு தயாராக உள்ளேன்.

 சோதிடர்: பரமேஸ்வரன் சுதாகர் 

சித்தர் சோதிட நிலையம் சூறிச் www.cittarastro.ch

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!