பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் பணி நீக்கம்

#America #Official #sacked #WhiteHouse
Prasu
3 hours ago
பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் பணி நீக்கம்

அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளார். இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
c