காசாவில் பட்டினியில் வாடும் 5 லட்சம் மக்கள் - ஐ.நா

#people #UN #Food #Gaza #famine #Starvation
Prasu
4 days ago
காசாவில் பட்டினியில் வாடும் 5 லட்சம் மக்கள் - ஐ.நா

காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர் காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும். பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. 

பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது. உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!