ரணில் விவகாரம்: சிக்கலில் பலர்
#SriLanka
#Arrest
#Ranil wickremesinghe
#Lanka4
Mayoorikka
3 months ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டப்போது, மேலதிக மன்றாடியர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
