நியூயார்க்கில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து - ஐவர் பலி!
#SriLanka
#Accident
#Newyork
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 days ago

அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் சுற்றுலா பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விபத்தின் போது பேருந்தில் 52 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்திற்குப் பிறகு மக்கள் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர், மேலும் பலர் சீட் பெல்ட் அணியவில்லை என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



