புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி அனுர
இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட 06 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர் ஸ்தானிகரை ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக சந்தித்துள்ளார்.
இந்தோனேசியா, பிரேசில், மாலைதீவு, துருக்கி, நேபாளம், தென் கொரியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதரகத் தலைவர்களை நான் வாழ்த்தியதுடன், சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதில் அவர்களின் பொறுப்பை வலியுறுத்தினேன்.
குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் நியாயமாகவும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுமாறும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உடனடியாகத் தலையிடுமாறும் அறிவுறுத்தினேன்.
வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதில் முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய நான்கு துறைகளிலும் தூதரகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
