மட்டக்களப்பில் வைத்தியரின் கோழி மற்றும் நாயை திருடிய நபர் போதை பொருட்களுடன் கைது

#Batticaloa #Arrest #Chicken #drugs #Robbery #Dog #Farm
Prasu
3 hours ago
மட்டக்களப்பில் வைத்தியரின் கோழி மற்றும் நாயை திருடிய நபர் போதை பொருட்களுடன் கைது

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவனை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட கோழிகள் மற்றும் நாயை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் 30 கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

images/content-image/1755718426.jpg

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கருவப்பங்கேணியைச் சேர்ந்த இளைஞனான பிரபல திருடனை 2,700 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து வைத்தியரின் பண்ணையில் திருடப்பட்ட 30 கோழிகளில் சிலவற்றையும் நாயையும் மீட்டதுடன், குறித்த இளைஞன் நீண்டகாலமாக பல திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்தவன் எனவும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிசார் இவரை 3 நாள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!