மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்பை திருத்த நடவடிக்கை!

#SriLanka #Election #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Bimal Ratnayake
Dhushanthini K
2 hours ago
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்பை திருத்த நடவடிக்கை!

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

கிளிநொச்சியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், "நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரில் தேர்தலையும் நடத்தினோம். 

அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அடிப்படை யோசனை என்று நாங்கள் நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. 

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் குறிக்கோள். மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்." என்றா். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!