ஏரியில் நீந்தச் சென்ற 12 வயது சிறுவன் பலி!
#SriLanka
#Death
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
ஏரியில் நீந்தச் சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய காவல் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தனது அத்தையுடன் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மதுரங்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
