முகேஷ் அம்பானியின் எண்ணை ஆலை மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் மிரட்டல்
#India
#Attack
#Pakistan
#Threat
#Terrorists
Prasu
1 week ago

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்கா வுக்கு சென்றார். அப்போது சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.
மேலும் சமீபத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட, இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி அசிம் முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடன் அடுத்த முறை போர் மூண்டால், என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காட்டவே அதைச் செய்தோம் என்று அவர் கூறி உள்ளார்.
இதன்மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான், குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலையை குறிவைத்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



