பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாத - தாக்குதல் ஒருவர் மரணம்
#Death
#Attack
#Pakistan
#GunShoot
#officer
#Terrorists
Prasu
2 months ago
வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது அடையாளம் தெரியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கான்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில், அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பெஷாவரில் இருந்து தென்மேற்கே 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹசன் கெல் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பதிலடி கொடுத்தனர்.
இதனால் கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் அபு பக்கர் என்ற கான்ஸ்டபிள் பலியானார். ஹரூன் என்ற அதிகாரி காயம் அடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உஷார் படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை வீழ்த்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
