சீதுவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை - சந்தேகநபருக்கு வலைவீச்சி!
#SriLanka
#Police
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 weeks ago

சீதுவ பொலிஸ் பிரிவின் எரியகஹலிந்த வீதிப் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) இரவு ஒரு குழுவினரால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் எரியகஹலிந்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர்.
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை, மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



