பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியா

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார். செப்டம்பர் மாதம் நடைபெறும் 80 வது கூட்டத்தொடரில் ஐ.நா. பொதுச் சபையில் நடைமுறைகளின்படி அங்கீகரிப்போம் என்று அவர் கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர். மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காசா மக்களின் பசி மற்றும் துன்பத்தைப் போக்க இரு நாடுகள் தீர்வுதான் சிறந்த வழி" என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



