அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க 5 நாடுகள் பரிந்துரை

இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து– கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா என மாதத்திற்கு ஒரு போர் வீதம் கடந்த 6 மாதங்களில் 6 போர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
இதனால் உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாட்டுத் தலைவர்கள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.
இதன் மூலம், டிரம்பை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானும் இஸ்ரேலும் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முன்மொழிந்தன. கம்போடியாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இந்த கோரிக்கையை வைத்தது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



