சீனாவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு
#China
#Death
#collapse
#Bridge
Prasu
1 month ago

சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம்.
அந்தவகையில் சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர். அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர்.
மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



