சுவிஸ் நாட்டில் கொள்ளை: தமிழர்கள் தொடர்பு? யார் குற்றவாளிகள்?

#Switzerland #swissnews #Lanka4 #beggars #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
சுவிஸ் நாட்டில் கொள்ளை: தமிழர்கள் தொடர்பு? யார் குற்றவாளிகள்?

சுவிஸர்லாந்தில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

 இந்த கொள்ளைச் சம்பவங்களிலே ஈடுபடுகின்றவர்கள் அதிகமானோர் வெளிநாட்டவர்களாக இருக்கின்றார்கள்.

 இவர்கள் செல்வந்தர்களையும் குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அத்தொடரு இவர்கள் தானியங்கி இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கின்றனர். 

 அத்துடன் வெளிநாட்டவர்களுடைய வழிபாட்டு தலங்களையும் குறிவைத்து இந்த கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குறிப்பாக சுவிஸில் 27 தொடக்கம் 30 இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அங்கே உள்ள உண்டியல் பணங்கள் மற்றும் விக்கிரகங்களுக்கு அணியப்பட்டிருக்கின்ற தங்கங்களை கொள்ளை அடிக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கும்பல் கும்பல் திருட்டு சம்பவங்ளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சிலரை பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

 கைது செய்யப்பட்டதின் பிற்பாடு பொலிஸார் அறிந்த விடயம் அந்த கொள்ளை கும்பலை நடாத்துகின்றவர்கள் ஒரு சில வருடங்களாக சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார்கள். அதேவேளையில் அவர்கள் தங்களுடைய நாட்டிலோ அல்லது பிற நாட்டில் இருந்து நபர்களை அழைத்து கொள்ளை அடித்தவுடன் அவர்களுடைய நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிடுகின்றார்கள் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.

 இதன்காரணமாக சுவிஸ் அரசாங்கம் மிகவும் கடுமையாக இந்த கொள்ளைக்காரர்களை கைது செய்வதற்கு முயற்சி செய்து வருகிறது. 

 இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதனால் இன்ரப்போல் எனப்படும் சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் மூலமாக அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த்து வருகின்றனர்.

 அந்த வகையிலே இந்த கொள்ளை சம்பவங்களை சமூகத்தில் பார்க்கின்ற பொழுது வெளிநாட்டவர்கள் அதிகமாக இதனை செய்கின்றார்கள் அதைவிட இவர் கொள்கை செய்வதற்கு முன்பாக ஒரு சில மாதங்களாக திட்டம் தீட்டி அந்த முகவரியை அதாவது அந்த கொள்ளையிடப் போகின்ற வீட்டு முகவரியை அவர்கள் கூகுள் மூலமாக ஸ்கேன் செய்து அதன் ஊடாக ஊடுருவி பார்த்து அதன் பிற்பாடுதான் அதனை திட்டம் தீட்டுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 எனவே சுவிஸில் வசிப்பவர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு லங்கா4 ஊடகம் கேட்டுக் கொள்கின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!