இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் போராட்டம் - பலர் கைது

#Arrest #Protest #Pakistan #ImranKhan #release
Prasu
15 hours ago
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் போராட்டம் - பலர் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். 

தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது. 

இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் நாடு தழுவிய மக்கள் போராட்டம் அவரது கட்சியான தெஹிரிக் - இ - இன்சாஃப் சார்பில் இன்று நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தானில் இன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டம் மற்றும் பேரணிகளில் ஈடுபட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர்,அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இம்ரான் கானின் விடுதலைக்காகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடியாலா சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754422591.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!