செம்மணி அகழ்வில் நிபுணத்துவ அவசியம் தேவை இல்லை! மனித உரிமைகள் ஆணைக்குழு

#SriLanka #Lanka4 #Human Rights #Human activities #SHELVAFLY #Semmani human burial
Mayoorikka
2 hours ago
செம்மணி அகழ்வில் நிபுணத்துவ அவசியம் தேவை இல்லை! மனித உரிமைகள் ஆணைக்குழு

பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் செம்மணி அகழ்வுப் பணிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நிபுணத்துவ அவசியம் இருப்பதாக தெரியவில்லை. 

அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில் அதுதொடர்பில் கலந்துரையாடுவோம் எனவும் செம்மணி மனித புதைகுழியை இன்று பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். 

 மேலும் கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்ச செம்மணி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த போவதாக தனது மனைவி மூலம் ஜனாதிபதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பிலும் அவருக்கு சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமா எனவும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்

 இதற்கு பதிலளித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவர் நாடுவாராக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!