12 மணிநேர நீர்வெட்டு - பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
#SriLanka
#water
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 05) களுத்துறையின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டி மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



