தாயை கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த மகள்!
#SriLanka
#Murder
#Crime
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 year ago
குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த மகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
