இன்றைய ராசிபலன் (04.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (04.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

பரணி: வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பதும், சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதும் நன்மையாகும். 

கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.  

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.

ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 1,2: நண்பர்களால் முயற்சியில் வெற்றி உண்டாகும். தம்பதிகளுக்குள் இணக்கம் ஏற்படும். 

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 

திருவாதிரை: எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். 

புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பிறரால் முடியாத வேலையை முடிப்பீர்கள். 

கடகம்:

புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.

பூசம்: குடும்பத்தினரால் மனதில் குழப்பம் கூடும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.  

சிம்மம்:

மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். 

பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.

உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவுவர்.  

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைப்பீர்கள். 

சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

துலாம்:

சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும்.

சுவாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். 

விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாயை அடைவீர்.

விருச்சிகம்:

விசாகம் 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

அனுஷம்: இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். வருமானத்தில் தடையுண்டாகும்.

கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் மறைமுகமாக  தொல்லை கொடுப்பர்.  

தனுசு:

மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் உண்டாகும். 

பூராடம்: செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும்.

உத்திராடம் 1: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடி ஏற்படும். திடீர் செலவுகளால் அவதிக்கு ஆளாவீர்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: லாபமான நாள். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்.

திருவோணம்: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். குருப்பார்வையால் நெருக்கடிகள் நீங்கும்.
 
சதயம்: வியாபாரத்தை விரிவுசெய்ய திட்டமிடுவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நற்செய்தி வரும்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

மீனம்:

பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். 

உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வழக்கு முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

ரேவதி: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!