திமுக வை சாடிய எடப்பாடி பழனிசாமி .... அஜித் குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்

#India #Death #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
17 hours ago
திமுக வை  சாடிய எடப்பாடி பழனிசாமி .... அஜித் குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்

மடப்புரம் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து அஜித்குமார் தாய், சகோதருக்கு ஆறுதல் தெரிவித்தார்.இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

 மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்?அ.தி.மு.க. போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். 

அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும். தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது.கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.கொலை நிலவரம் என்ன என செய்தி வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் நிலை உள்ளது என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!