நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது! நாமல்

#SriLanka #Namal Rajapaksha #Court #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
16 hours ago
நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது! நாமல்

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

 நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

 அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடினோம்.எம்முடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் அன்று வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த போராட்டத்தின் போது நாங்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். 

அந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தால் தான் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் என்னை கைது செய்வதற்கு திங்கட்கிழமை (28) பிடியாணை பிறப்பித்தது. செவ்வாயக்கிழமை (29) நீதிமன்றத்தின் முன்னிலையாகி அந்த பிடியாணையை நீக்கிக் கொண்டேன். நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

எம்மை கைது செய்வதால் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. போராட்டங்களினால் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.கடந்த 75 ஆண்டுகாலமாக யார் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டது. மக்கள் விடுதலை முன்னணி கடந்த 75 வருட காலமாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி எதிராகவே போராடியது. அன்று போராடியது.இன்று ஏதும் தெரியாமல் தள்ளாடுகிறது.

 எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 1 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதுவரையில் தொழிற்றுறையை விருத்தி செய்யும் எவ்வித திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை.இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!