உயிர்களை காவுகொள்ளும் பாதுகாப்பற்ற ரயில் கடவை (வீடியோ இணைப்பு)

#SriLanka #Kilinochchi #Lanka4 #Train #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
6 hours ago
உயிர்களை காவுகொள்ளும் பாதுகாப்பற்ற ரயில் கடவை (வீடியோ இணைப்பு)

கிளிநொச்சியில் இரணைமடு சந்தியில் இருந்து பாரதிபுரத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ரயில் கடவை பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 குறித்த பாதை ஊடாக நுற்றுக்கணக்கான மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதாகவும் அத்துடன் மாணவர்கள் உட்பட பலர் சென்று வருகின்றனர்.

 பாரதிபுரம், அறிவியல் நகர், கிருஷ்ணபுரம் போன்ற கிராமத்து மக்கள் இந்த பாதை ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர். 

 கடவையை அடைப்பதற்கான கம்பிகள் போடப்பட்டுள்ள நிலையில் அவற்றை இன்னும் செயற்படுத்தவில்லை. ஒரு ரயில் கதவை காப்பாளரே உள்ளதால் அவரே குறித்த பாதையூடான போக்குவத்தினை ஒழுங்கு செய்வதை அவதானிக்க முடிகின்றது.

 எனவே குறித்த பாதையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை உடனடியாக சீர் செய்து பாதுகாப்பான வேலி அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை முருகண்டியில் இருந்து பரந்தன் முகமாலை வரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752789402.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!