முன்னேற்பாடு பணிகள் என்ன ? - பதில் அளிக்க போலீசாருக்கு உத்தரவு த.வெ.க. மாநாடு ..
#India
#Vijay
#Politics
Lanka4
8 hours ago

த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த (ஆகஸ்டு) மாதம் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி என்ற இடத்தில் நடைபெற உள்ளமையினால்
இதற்காக 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில். இதற்கான கால்கோள் விழா கடந்த 16-ந்தேதி நடைபெற்றது.
இதில் கலந்த கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்றைய தினமே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி வேண்டியும், உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு வழங்கியுள்ளார். அந்த மனுவில், மாநாடு தொடர்பான மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



