பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள் : 13 இராணுவ வீரர்கள் பலி!

#SriLanka #Pakistan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 months ago
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள் : 13 இராணுவ வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் தலிபான் இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பொதுமக்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகனம், ராணுவ வீரர்கள் பயணித்த அணிவகுப்பு வாகனத்தை மோதி வெடிக்கப்பட்டது. இதில், 13 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 மேலும் 10 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் நிகழ்ந்தது. வெடியில் அருகிலுள்ள இரண்டு வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து, ஆறு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தலிபான் பிரிவின் ஒரு அங்கமான ஹபீஸ் குல் பகதூர் குழுவின் தற்கொலைப்படை பிரிவு பொறுப்பேற்றுள்ளது. 

2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய குழுக்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்த தாக்குதல், தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி ஏற்க்கப்பட்டதற்குப் பிறகு, பாகிஸ்தானில் எல்லைப் பகுதிகளில் வன்முறை அதிகரித்து வருவதை இது புலப்படுத்துகிறது. 

பாகிஸ்தான், தங்கள்மீது தாக்குதல் நடத்தும் குழுக்களுக்கு, ஆப்கானிஸ்தான் தங்கள் நிலத்திலிருந்து அனுமதி வழங்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. 

எனினும், இந்த குற்றச்சாட்டை தலிபான் நிராகரித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4