மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளியால் இருவர் மரணம்
#Death
#Mexico
#Climate
#Disaster
Prasu
2 months ago

மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது.
அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது. மெக்சிகோ நாட்டின் பசிபிக் கடலோர பகுதியில் சுற்றுலா நகரங்களான அகாபுல்கோ மற்றும் போர்ட்டோ எஸ்காண்டிடோ ஆகியவற்றுக்கு இடையே பெரும் பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தி சென்றது. அது கரையை கடந்து சென்றபோது பலத்த காற்றும் வீசியது.
புயலால் கனமழை பெய்தது. இதனால், வெள்ள நீர் பல்வேறு பகுதிகளையும் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால், பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை சரி செய்யும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்த புயலால், 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



