இந்தியர்களுக்காக வான்வெளி தடையை நீக்கிய ஈரான்

#Student #Iran #Indian #Airlines
Prasu
3 months ago
இந்தியர்களுக்காக வான்வெளி தடையை நீக்கிய ஈரான்

ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஈரானில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு முதலில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த வகையில் தெஹ்ரானில் இருந்து மஷாத் நகருக்கு சுமார் ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அவர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதற்காக ஈரான், வான்வெளி தடையை நீக்கியுள்ளது. ஏற்கனவே, ஈரானில் இருந்து அர்மேனியா நாட்டிற்கு இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு அங்கிருந்து, இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் ஈரானின் மஷாத் நகரில் இருந்து மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற ஈரான் தற்காலிகமாக அதன் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750440088.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!