கிரீஸில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு - சுனாமி எச்சரிக்கை
#Earthquake
#tsunami
#Warning
#Greece
Prasu
2 months ago

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும் 77 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



