சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

#Switzerland #people #Warning #Land_Slide
Prasu
1 year ago
சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றம் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெற்கு வாலெய்ஸ் மாகாணத்தில் (மாநிலம்) உள்ள பிளாட்டனில் வசிக்கும் 90 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாலெய்ஸில் உள்ள அதிகாரிகள், பாறைகள் விழுதல் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தைக் காரணம் காட்டி, இரண்டு பகுதிகளைத் தவிர, சுமார் 300 பேர் கொண்ட கிராமத்தை முழுமையாக வெளியேற்றுவதாக அறிவித்தனர்.

குடியிருப்பாளர்கள் எப்போது வீடு திரும்ப முடியும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. 2023 ஆம் ஆண்டில், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிரைன்ஸ் கிராமத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர், அதற்கு முன்பு ஒரு பெரிய பாறை மலைப்பகுதியில் சரிந்து, குடியேற்றத்திற்கு சற்று அருகில் நின்றது.

மேலும் பாறை சரிவு அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பிரைன்ஸ் மக்கள் வெளியேற்றப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747730737.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4