புட்டின் போர் நிறுத்தத்தை கோரியபோதிலும் தாக்குதல் நடத்திய உக்ரைன் - முக்கிய விமான நிலையங்கள் மூடல்!
#SriLanka
#Russia
#War
#Russia Ukraine
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

ரஷ்யாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், 19 ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
தாக்குதல்கள் காரணமாக நகரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பு தலைநகரில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



