கோவாவில் மத ஊர்வலத்திற்காக ஒன்றுக்கூடிய மக்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 06 பேர் பலி!

இந்தியாவின் மேற்கு மாநிலமான கோவாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவாவின் பிச்சோலிமில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலில் அதிகாலை 3 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு வருடா வருடம் நடைபெறும் லைராய் தேவி ஜாத்ரா அல்லது ஊர்வலத்திற்காக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுக்கூடியிருந்தனர்.
கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நேரில் கண்ட சாட்சிகள் பக்தர்களிடையே திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், இது பீதி மற்றும் குழப்பத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலல் அதிகமாக இருந்தமையால் காவல்துறையினருக்கு அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



