கிரேக்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 38 வயது பெண் மரணம்
#Death
#Women
#BombBlast
#Greece
Prasu
2 months ago

கிரீஸ் நாட்டின் வடக்கு நகரான தெசாலோகினி நகரில் பெண் ஒருவர் வெளிப்படையாக கையில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது திடீரென வெடித்ததில் உடல் சதறி பலியானார்.
ஒரு வங்கி அருகில் 38 வயது பெண் ஒருவர் கையில் வெளிப்படையாக வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குண்டு வெடித்ததில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதில் சாலையோரம் இருந்து பல கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
அந்த பெண் மீது கடந்த காலங்கில் பல கொள்ளை வழக்குகள் இருந்ததாகவும், தற்போது தீவிர இடதுசாரி குழுக்களடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



