இரண்டாவது முறையாக பிரதமரான அந்தோணி அல்பானீஸ்

#PrimeMinister #Election #Australia #Vote
Prasu
2 months ago
இரண்டாவது முறையாக பிரதமரான அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 

இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார்.

கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746292419.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!