சவுதி அரேபியாவுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
#America
#Missile
#saudi
Prasu
2 days ago

சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா தொடக்க கால அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பு இடைநிலை தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் AIM-120C-8 அட்வான்ஸ் ஏவுகணைகள் 1000 மற்றும் மற்ற தொழில்நுட்ப சப்போர்ட் போன்ற ஆயுதங்களை விற்பனை செய்ய இருக்கிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



