இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

#India #America #Pakistan #War #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
11 hours ago
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தானிடம் அமெரிக்கா  வலியுறுத்தல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.

 கடந்த 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 

இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, 'பஹல்காம் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட வேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று மார்கோ ரூபியோ அறிவுறுத்தினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746052587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!