மின் வெட்டு காரணமாக 15,000 கோடி இழந்த ஸ்பெயின்

#government #power cuts #Spain
Prasu
5 hours ago
மின் வெட்டு காரணமாக 15,000 கோடி இழந்த ஸ்பெயின்

ஸ்பெயினில் இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 

இதனால் நாட்டில் உள்ள மின்சார ரெயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உள்பட போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 

இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது. மின் வெட்டு பாதிப்பு அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகலிலும் உணரப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746132753.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!