எரிபொருள் விலையில் மாற்றம்!
#SriLanka
#Fuel
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago

எரிபொருள் விலையில் நேற்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஆக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 293 ரூபாய் ஆகும்.
95 ஆக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 341 ரூபாய் ஆகும்.
ஒரு லிட்டர் வெள்ளை டீசலின் விலை 12 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 274 ரூபாயாக காணப்படுகிறது.
மேலும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 325 ரூபாய் ஆகும்.
இலங்கை மண்ணெண்ணெய் விலையும் ரூ.5 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 178 ரூபாய் ஆகும்.
அனுசரணை(வீடியோ இங்கே அழுத்தவும்)



